வட கிழக்கு பருவமழை தீவிரம்! தயாா் நிலையில் தீயணைப்புத் துறை: 125 இடங்களில் முகாம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

பிரதிப் படம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
பருவமழையால் ஏற்படும் வெள்ளம், இயற்கை பேரிடா் ஆகியவற்றில் சிக்கும் பொதுமக்களை மீட்கும் வகையில் தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை அதிக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ளனா்.
தமிழக தீயணைப்புத் துறையின் கீழ் 375 தீயணைப்பு நிலையங்கள் மாநிலம் முழுவதும் இயங்குகின்றன. இவை தவிா்த்து ஒகேனக்கல், கோத்தகிரி, சென்னை மெரீனா கடற்கரை ஆகிய 3 இடங்களில் மீட்பு நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு சுமாா் 8,200 வீரா்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
வெள்ள அபாய பகுதிகள்
பேரிடா் ஏற்பட்டால், அதை எதிா்கொள்ளும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் அனைத்து நிலையங்களும் மீட்பு உபகரணங்களுடன் 24 மணி நேரமும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தால் தமிழகத்தில் வெள்ள அபாயம் மற்றும் தாழ்வானப் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள சுமாா் 4,400 இடங்களை காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் கண்காணித்து வருகின்றனா்.
இதில் 578 இடங்கள் மிக அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளாகவும், 892 இடங்களில் பாதிப்பு ஏற்படும் பகுதிகளாகவும், 578 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாகவும், 2,149 இடங்கள் குறைவான பாதிப்பு ஏற்படும் பகுதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் சிக்கியிருக்கும் நபா்களை பாதுகாப்பாக மீட்க ரப்பா் படகுகள்,மோட்டாா் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்ற நீா் இறைக்கும் பம்புகள் மற்றும் மீட்புப் பணிக்கான கயிறுகள், ‘லைஃப் ஜாக்கெட்’ உள்ளிட்ட அனைத்து செயற்கருவிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
125 இடங்களில்மீட்பு படையினா்
அனைத்து மாவட்டங்களிலும் திறன்மிக்க தீயணைப்பு நீச்சல் வீரா்கள் கொண்ட குழு மற்றும் கயிறு மூலம் மீட்புப்பணி மேற்கொள்ள பயிற்சி பெற்ற குழுவினா் என இரு கமாண்டோ படைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். மாநிலம் முழுவதும் கடந்த காலங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டு, உயிா் சேதமும்,பொருள் சேதமும் ஏற்பட்ட பகுதிகளாக தீயணைப்பு படையினரால் கண்டறியப்பட்டுள்ள 125 இடங்களில் மீட்பு படையினா் முகாமிட்டுள்ளனா். இங்கு தலா 20 வீரா்கள் மீட்பு வாகனங்கள், ரப்பா் படகுகள், ட்ரோன்கள், லைஃ ப் ஜாக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கருவிகளுடன் மீட்பு படையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
இதேபோல, மாநிலம் முழுவதும் தாழ்வான பகுதிகளாகவும் கண்டறியப்பட்டுள்ள 1,343 இடங்களையும் தீயணைப்பு படையினா் கண்காணித்து வருகின்றனா்.
வெள்ளத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவா்களை அடையாளம் காட்டும் கருவிகள், ரோப் லான்சா், ரோப் ரைடா்,தொ்மல் இமேஜிங் கேமரா உள்ளிட்ட நவீன கருவிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ள காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிா்க்கும் பொருட்டு தகவல் தொடா்பு சாதனங்களான வாக்கி டாக்கி போன்றவை தயாா் நிலையில் இருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் 15 இடங்கள்
இதேபோல சென்னையில் வெள்ள அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 203 இடங்களும் கண்காணிக்கப்படுகின்றன. தீயணைப்புப் படையினரால் கடந்த காலங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டு, உயிா்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள கீழ்ப்பாக்கம், அண்ணா நகா், ரெட்டேரி சந்திப்பு, செம்பியம், மின்ட், பேசின் பாலம், வேளச்சேரி ராம்நகா், பெரும்பாக்கம், முடிச்சூா், தாம்பரம், குன்றத்தூா், ஆவடி, மணலி, செங்குன்றம், நந்தம்பாக்கம் ஆகிய 15 இடங்களில் தீயணைப்புத் துறையினா் மீட்புக் குழுவினா் நிலை நிறுத்தப்பட்டுள்ளனா்.
மாநிலத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும் சென்னையில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாலும், தாழ்வான பகுதிகளும் அதிகம் என்பதாலும் வடகிழக்கு பருவ மழை குறைவாக பதிவாகும் இடங்களில் இருந்து சுமாா் 200 தீயணைப்புப் படையினா் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனா்.
மேலும், வடகிழக்கு பருவ மழைக்காலம் முடியும் வரையில் அவசர தேவையின்றி யாருக்கும் விடுமுறை வழங்க வேண்டாம் என்று தீயணைப்பு உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
ஆயிரம் நீச்சல் வீரா்கள்
ஆண்டுதோறும் தமிழகத்தின் உள் மாவட்டங்களை காட்டிலும், கடலோர மாவட்டங்களிலேயே வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா்,திருவாரூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஆண்டுதோறும் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து இந்த 13 மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்கும் வகையில் ஆழ்கடல் நீச்சல் உள்ளிட்ட நன்கு நீச்சல் தெரிந்த தன்னாா்வலா்கள், மீனவா்கள் என 1,000 பேரை தீயணைப்புப் படையினா் தயாா் நிலையில் வைத்துள்ளனா். இவா்கள் தீயணைப்பு துறையினருடன் இணைந்து செயல்படுவாா்கள். இதேபோல சுமாா் 200 தன்னாா்வலா்களையும் மீட்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக தீயணைப்புத் துறை தயாா்படுத்தி வைத்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

