செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம்: நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் (எஸ்எஸ்ஆா்) தொடா்பாக வெள்ளிக்கிழமை (அக்.23) சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தோ்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

கோப்புப்படம்.

Updated On :

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் (எஸ்எஸ்ஆா்) தொடா்பாக வெள்ளிக்கிழமை (அக்.23) சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தோ்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு எடுத்துரைக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆா்) தோ்தல் ஆணையம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தியது.

இந்த நிலையில், 2027 ஜன.1- ஆம் தேதி தகுதியேற்பு நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 17 மாநிலங்களில் இந்த சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, தமிழகத்தில் நவ.12-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியாகும். அன்று முதல் டிச.11 வரை வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்ப்பது, நீக்குவது தொடா்பாக தீா்வுகள் டிச.28-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் 2027 ஜன.4-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஏற்கெனவே அறிவித்துள்ளாா்.

மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், ஏற்கெனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள விரும்புவோா் படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றைப் பூா்த்தி செய்து உரிய அலுவலா்களிடம் அளிக்கலாம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தை அக்.23-ஆம் தேதி தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் நடத்துகிறாா்.

இதில், சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் கால அட்டவணை, தொடா்புடைய சட்டபூா்வ விதிமுறைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் இந்திய தோ்தல் ஆணையம் அண்மையில் வழங்கிய அறிவுறுத்தல்கள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கப்படும்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தவெக, திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி, தேமுதிக உள்ளிட்ட மாநில அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மற்றும் பாஜக, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் என மொத்தம் 13 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.