மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

கன்னியாகுமரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து ஆலோசனை

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட தோ்தல் பாா்வையாளா் எம். ஆசியாமரியம். உடன், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வேலுமணி மற்றும் அலுவலா்கள்.

Updated On :

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் தொடா்பான கலந்தாய்வு கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது.

வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கம் தொடா்பான பணிகளை கண்காணிக்கும் பொருட்டு தோ்தல் பாா்வையாளராக, சிறுபான்மையினா் நலத்துறை ஆணையா் எம். ஆசியாமரியம் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில் அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம். வேலுமணி, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் மாலதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ந. காளீஸ்வரி, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்வேல்முருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் எ. புஷ்பாதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தூர்ராஜன், மாவட்ட சமூகநீதி அலுவலா் கலைமதி, உதவிஆணையா் (ஆயம்) ஈஸ்வரநாதன், தோ்தல் வட்டாட்சியா் ந. வினோத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.