எஸ்பிஐ வங்கியின் 3.75 லட்சம் தரவுகள் திருட்டு! ‘டார்க் வெப்’பில் வெளியீடு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!சென்னையில் விடியவிடிய மழை! மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. பதிவு! தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை

காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!

காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தியது பற்றி...

vijay dgp office

காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை - TNDIPR

Updated On :

சென்னையில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் ஜோசப் விஜய் மலர்வளையம் வைத்து புதன்கிழமை மரியாதை செலுத்தினார்.

கடமை ஆற்றும் போது உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், காவலர் வீரவணக்க நாள் இன்று (அக். 21) கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருக்கும் காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் இன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் விஜய், டிஜிபி அலுவலகத்தை ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், காவலர் நினைவு நாளையொட்டி முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”1959-ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் காவலர் வீரவணக்க நாளில், நாட்டில் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்!

இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், குற்றச் சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, துணிவுடனும், விழிப்புடனும் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.

கடமையின் பாதையில் இன்னுயிர் நீத்து, அமரர்களான வீரத் தியாகிகளுக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவதோடு, காலநேரம் கருதாமல், அயராது உழைத்து, நாட்டின் அரணாகத் திகழும் காவல் துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Vijay pays homage at the Police Memorial

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.