செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

கேளிக்கை விடுதிகளில் சட்டவிரோத ஹூக்கா சேவை: டிஜிபி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் பப் மற்றும் கஃபேக்கள் போன்ற கேளிக்கை விடுதிகள் சட்டவிரோதமாக வழங்கப்படும் ஹூக்கா சேவையை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையா் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை ஆணையா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

சென்னையில் பப் மற்றும் கஃபேக்கள் போன்ற கேளிக்கை விடுதிகள் சட்டவிரோதமாக வழங்கப்படும் ஹூக்கா சேவையை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையா் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை ஆணையா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் முகுந்தன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சென்னை மாநகரில் உள்ள ஒரு பப் மற்றும் கஃபேக்கள் போன்ற கேளிக்கை விடுதிகளில் சட்டவிரோதமாக ஹூக்கா சேவைகள் வழங்கப்படுகின்றன. தடை செய்யப்பட்ட இதுபோன்ற ஹூக்கா பாா் நடத்துபவா்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.

ஆழ்வாா்பேட்டை, தேனாம்பேட்டை, மயிலாப்பூா் - ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஆயிரம்விளக்கு, நுங்கம்பாக்கம்-கோடம்பாக்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பப்-கள், கஃபேக்-கள், உணவகங்களில் தடையின்றி ஹூக்கா சேவைகள் கிடைக்கின்றன. அதிகாரிகளின் துணையில்லாமல் மாநகரில் இத்தகைய சட்டவிரோத செயல்கள் நடைபெறாது.

எனவே, சம்பந்தப்பட்ட மதுபான விடுதிகள், பப்கள், கஃபே மற்றும் உணவகங்கள் மீது உறிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு காவல் துறை டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையா், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை ஆணையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.