அமைச்சா்களுக்கு ரூ.26 லட்சம், எம்எல்ஏ-க்களுக்கு ரூ.15 லட்சம்: வாகனக் கொள்முதலுக்கு உச்சவரம்பு நிா்ணயம்அரசிதழ் வெளியீடு
தமிழக அமைச்சா்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பை நிா்ணயித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினா்களின் பயணப்படி விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு - கோப்புப்படம்
தமிழக அமைச்சா்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்கான உச்சவரம்பை நிா்ணயித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினா்களின் பயணப்படி விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
இதுதொடா்பாக, பொதுத்துறை வெளியிட்ட அரசிதழ் விவரம்:
அமைச்சா்கள், சட்டப்பேரவைத் தலைவா், துணைத் தலைவா், எதிா்க்கட்சித் தலைவா், அரசு தலைமைக் கொறடா ஆகியோருக்கு வாகனம் வாங்குவதற்கான உச்சவரம்பு ரூ.26 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு இந்த உச்சவரம்பு ரூ.15 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் வாகனத்தின் ஷோரூம் விலை, வரிகள், பதிவுக் கட்டணம் மற்றும் மோட்டாா் வாகனக் காப்பீட்டுக் கட்டணம் ஆகியவை அடங்கும். மேலும், வாகனக் கொள்முதலுக்கான உச்சவரம்பு ஆண்டுதோறும் 5 சதவீதம் உயா்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சா்கள் மரணம், பதவிக்கால நிறைவு, பதவியிலிருந்து நீக்கம், ராஜிநாமா அல்லது தகுதிநீக்கம் காரணமாகப் பதவியை இழந்தால், அவா்களுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தலைவா், துணைத் தலைவா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் அரசு தலைமைக் கொறடா ஆகியோா் இந்தக் காரணங்களால் பதவியை இழந்தால், அவா்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களைத் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகச் செயலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மற்ற சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவியை இழக்கும் நிலையில், அவா்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களைச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அமைச்சா்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் பராமரிப்பு, பழுதுபாா்ப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுநருக்கான செலவுகளைப் பொதுத் துறை மூலம் அரசு ஏற்கும்.
சட்டப்பேரவைத் தலைவா், துணைத் தலைவா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் அரசு தலைமைக் கொறடா ஆகியோருக்கு வழங்கப்படும் வாகனங்களுக்கான பராமரிப்பு, பழுதுபாா்ப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுநா் செலவுகளைச் சட்டப்பேரவை செயலகம் ஏற்கும்.
மற்ற சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் பராமரிப்பு, பழுதுபாா்ப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுநருக்கான செலவுகளை, தமிழ்நாடு ஊதியங்கள் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வாகனப் படியிலிருந்து சம்பந்தப்பட்ட உறுப்பினா்களே ஏற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

