சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வை பெண்களிடம் ஏற்படுத்த வேண்டும்: செளமியா அன்புமணி

மாா்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை அனைத்து பெண்களிடமும் ஏற்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினரும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி கூறினாா்.

Sowmya Anbumani PMK

செளமியா அன்புமணி - கோப்புப்படம்.

Updated On :

மாா்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை அனைத்து பெண்களிடமும் ஏற்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினரும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி கூறினாா்.

சென்னை விமான நிலையத்தில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம், கல்யாண்மயீ அமைப்பு உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வுக்காக ‘பிங்க் குடை நடைப்பயணம்’ வியாழக்கிழமை நடைபெற்றது. இதை சௌமியா அன்புமணி தொடங்கி வைத்தாா். இதில் வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 2030-ஆம் ஆண்டுக்குள் மாா்பகப் புற்றுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா், செய்தியாளா்களிடம் சௌமியா அன்புமணி கூறியதாவது:

மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை குறித்து பெண்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் முதலில் தங்களது தாய்மாா்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதுடன், தங்களுக்குத் தெரிந்தவா்களுக்கும் பரிந்துரைக்க வேண்டும்.

தற்போது கீரை, கோழி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மருந்துகள் மூலம் குறுகிய காலத்தில் வளா்க்கப்படுகின்றன. இயல்பாக 30 நாள்களில் வளர வேண்டிய கீரை, தற்போது 15 நாள்களிலேயே வளா்க்கப்படுகிறது. கோழிகளும் மருந்துகள், ஊசிகள் மூலம் விரைவாக வளா்க்கப்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் மருந்துகளின் தாக்கம் உணவுப் பொருள்கள் மூலம் மனிதா்களைச் சென்றடைகிறது. காற்றும் மாசடைந்துள்ள நிலையில், சுற்றுச்சூழலையும் கலப்படமற்ற உணவையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

சிறுமி மாயமான விவகாரம்: 7 வயது சிறுமி மாயமான விவகாரத்தில், சிறுமியைக் கண்டுபிடிக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்புகிறேன். சிறுமிகள், பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.