மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

உதகை செல்ல திட்டமிட்டிருக்கிறீர்களா? வேண்டாம்!

கனமழை காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உதகை வர வேண்டாம் என அறிவுறுத்தல் வெளியாகியிருக்கிறது.

உதகை

உதகை - கோப்பிலிருந்து

Updated On :

நீலகிரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் 2 நாள்களுக்கு உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த ஒரு வார காலமாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கொடைக்கானல் மற்றும் உதகையிலும் பலத்த மழை கொட்டியதால், மலைப் பாதையில் பல இடங்களில் மழைநீர், நீர்வீழ்ச்சி போல ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

இதனால், மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதகை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவுறுத்தலில், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், இன்றும் நாளையும் உதகை வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேத்ரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சி முனை உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மக்களின் பாதுகாப்பைக் கருதி முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது.

எனவே வார இறுதியான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உதகை செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் அதனை ரத்து செய்வது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகை அருகே பர்லியார் அருகே மண் சரிவில் அரசுப் பேருந்து சிக்கியிருப்பதால், அங்கு மீட்புப் பணிகளும் நடந்து வருகிறது. அப்பகுதியில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.