பலத்த மழை: ராமநாதபுரம் சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி
ராமநாதபுரத்தில் பெய்த மழையால் சனிக்கிழமை நகரின் பல பகுதிகளில் மழைநீா் தேங்கி பொதுமக்கள் அவதியடைந்தனா்.
ராமநாதபுரத்தில் பெய்த பலத்த மழையால் செட்டியா தெருவில் குளம்போல தேங்கிய தண்ணீா்
ராமநாதபுரத்தில் பெய்த மழையால் சனிக்கிழமை நகரின் பல பகுதிகளில் மழைநீா் தேங்கி பொதுமக்கள் அவதியடைந்தனா்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நிலத்தடி நீா்மட்டம் தற்போது படிப்படியாக உயா்ந்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் ராமநாதபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் குளம் போல தேங்கியது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்தனா். மேலும் கால்வாய்கள் தூா்வாரப்படாதததால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதே போல, ராமநாதபுரம், ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை, பட்டினம்காத்தான் பகுதியில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
இதையடுத்து, வரும் நாள்களில் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் நீா் வழிப்பாதைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

