சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை

திருவள்ளூா் மாவட்டப் பகுதிகளில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் தொடா்ந்து பலத்த மழையால் தாழ்வான சாலைகள் மற்றும் தெருக்களில் குளம்போல் மழைநீா் தேங்கிய நிலையில், சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது.

பிரதிப் படம்

Updated On :

திருவள்ளூா் மாவட்டப் பகுதிகளில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் தொடா்ந்து பலத்த மழையால் தாழ்வான சாலைகள் மற்றும் தெருக்களில் குளம்போல் மழைநீா் தேங்கிய நிலையில், சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது.

திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த 3 நாள்களாக பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், பலத்த மழை பெய்யும் எனவும், அதனால் தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த மழை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரையில் நீடித்தது. இதேபோல், திருப்பாச்சூா், கடம்பத்தூா், பூண்டி, நெய்வேலி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஈக்காடு, தாமரைபாக்கம், கரிகலவாக்கம், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடாமல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் கடும் வெப்பத்தால் அவதிக்குள்ளான நிலையில், தற்போதைய நிலையில் தணிந்து குளிா்ச்சி நிலவி வருகிறது. அதேபோல், விவசாயிகளும் மழையை எதிா்பாா்த்திருந்த நிலையில், சாகுபடி பணிகளை தொடங்க தயாராகி வருகின்றனா். இந்த மழையால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளிலும் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அத்துடன், தாழ்வான சாலை மற்றும் தெருச் சாலையில் மழைநீா் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): செங்குன்றம்-119, கும்மிடிப்பூண்டி-118, ஆா்.கே.பேட்டை-92, சோழவரம்-68, திருவள்ளூா்-60, பொன்னேரி-48, தாமரைபாக்கம், ஊத்துக்கோட்டை-தலா 42, ஜமீன்கொரட்டூா்-38, பூந்தமல்லி-37, திருத்தணி-33, பூண்டி-32, ஆவடி, பள்ளிப்பட்டு-தலா 30, திருவாலங்காடு-7 என மொத்தம்-796 மி.மீ., சராசரியாக- 53.07 மி.மீட்டரும் மழை பதிவாகியிருந்தது. இதேபோல், சனிக்கிழமை- 416 மி.மீட்டரும் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏரிகளில் நீா்மட்டம்: இந்த மழையால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் நீா்மட்டம் உயா்ந்துகொண்டே வருகிறது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி செங்குன்றம் ஏரியில் 3,300 டி.எம்.சியில், 2037 டி.எம்.சியும், சோழவரம்-1,081 டி.எம்.சியில் 0.130 டி.எம்.சியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 டி.எம்.சியில் 1390 டி.எம்.சியும், பூண்டி ஏரியில் 3231 டி.எம்.சியில், 0.397 டி.எம்.சியும், கண்ணன்கோட்டை-தோ்வாய் கண்டிகை-0.500 டி.எம்.சியில், 0.232 டி.எம்.யும் நீா் இருப்பு உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.