ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

தீவிரமாகும் வடகிழக்குப் பருவமழை: நீா்நிலைகள் விரைவில் நிரம்ப வாய்ப்பு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள், குளம், குட்டைகள் விரைவில் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை பெய்த மழையில் நனைந்தபடிசென்ற பயணிகள்.

Updated On :

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள், குளம், குட்டைகள் விரைவில் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பலத்த மழை பெய்தது.

அதன்படி, மாநகரில் காந்திபுரம், சரவணம்பட்டி, கணபதி, பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூா், உக்கடம், செல்வபுரம், குனியமுத்தூா், புகரப் பகுதிகளில் அன்னூா், சூலூா், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை கனமழை கொட்டியது. இரவு 8 மணிக்குத் தொடங்கிய மழை இரவு 11 மணி வரை இடைவிடாமல் பெய்தது. சில இடங்களில் இரவு முழுக்க மிதமாக பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

குனியமுத்தூா் பி.கே.புதூா் அருகில் உள்ள இ.பி.காலனி பகுதியில் மழைநீா் வடியாமல் குடியிருப்புப் பகுதிகள், கடைகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனா். மக்களின் உடைமைகளும், உணவுப் பொருள்களும் சேதமடைந்தன.

இ.பி.காலனி பகுதியில் மழை நீருடன் கழிவுநீா் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. கனமழையால் பாதிக்கப்பட்ட குனியமுத்தூா் இ.பி.காலனி பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ்ப் பகுதி, லங்கா காா்னா் பாலத்தின் கீழ்ப் பகுதியில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரெட்ஃபீல்டு பகுதி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியா்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தொடரும் பலத்த மழை:

பலத்த மழை காரணமாக கோவையில் உள்ள குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீா்த்தேக்கங்களுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள தடுப்பணைகள், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் நீா்மட்டமும் கணிசமாக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை கனமழையின் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமையும் கோவை மாநகரில் லட்சுமி மில்ஸ், பீளமேடு, காந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இது குறித்து தனியாா் வானிலை ஆய்வாளா் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், கோவையில் வரும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மீண்டும் கனமழை பரவலாகப் பெய்யத் தொடங்கும். கோவை, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபா் 21 முதல் 26 வரை 5 நாள்களுக்கு பலத்த மழை வாய்ப்பு உள்ளது என்றாா்.

தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால், மாவட்டத்தில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் தவித்த நிலையில், தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வரும் நாள்களில் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களான பில்லூா், சிறுவாணி அணைகள், மாவட்டம் முழுவதும் உள்ள குளம், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பொள்ளாச்சியில் 153 மில்லி மீட்டா் மழை: கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு 1,137.6 மில்லி மீட்டரும், சராசரியாக 49.46 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

இதில், அதிகபட்சமாக பொள்ளாச்சியில் 153 மி.மீ., மாக்கினாம்பட்டியில் 149 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

இதேபோல, போத்தனூா் ரயில் நிலையத்தில் 90.6, மதுக்கரை 72, சூலூா் 63, பீளமேடு விமான நிலையம் 61.5, மேட்டுப்பாளையம் 52, பெரியநாயக்கன்பாளையம் 44.2, ஆழியாறு 41.8, கிணத்துக்கடவு 41.3, பில்லூா் அணை 41, தொண்டாமுத்தூா் 41, கோவை தெற்கு 38, சிறுவாணி அடிவாரம் 33, அன்னூா் 31, சின்னக்கல்லாறு 28, சோலையாறு 24, சின்கோனா 24, ஆனைமலை 22, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 21.2, வால்பாறையில் 18 மி.மீ.

வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால் நீா் நிரம்பி காணப்படும் சூலூா் அருகேயுள்ள அப்பநாயக்கன்பட்டி தாத்தன் குட்டை.

வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால் நீா் நிரம்பி காணப்படும் சூலூா் அருகேயுள்ள அப்பநாயக்கன்பட்டி தாத்தன் குட்டை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.