கோவை மாணவன் தற்கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!
கோவை மாணவன் தற்கொலை வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து...

சிபிசிஐடி - கோப்புப்படம்
கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சேர்ந்த 11 -ஆம் வகுப்பு மாணவன் அகிலன் தற்கொலை வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவை, பீளமேடு ஏ.டி. காலனியைச் சேர்ந்த அசோக்குமார், கௌசல்யாதேவி தம்பதியின் மகன் அகிலன் (16). பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இவர், கடந்த 21-ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அண்மையில், பள்ளியில் அகிலனின் ஜாதியைத் தெரிந்து கொண்ட மாணவர்கள் சிலர் அவரை ஒதுக்கி வைத்ததாகவும், துன்புறுத்தும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அகிலன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி மாணவரின் பெற்றோர், மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் வந்தனர்.
மாணவர் அகிலன் தற்கொலை விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் மாணவர் தற்கொலை தொடர்பாக சக மாணவா்கள் இருவரை பீளமேடு காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் சனிக்கிழமை இளஞ்சிறார்கள் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அரசினர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த விசாரணையைத் தீவிரப்படுத்தும் வகையில் காவல் துணை ஆணையர் தங்கதுரை தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று அகிலனின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
Summary
The case of the suicide of Akhilan, an 11th-grade student from the Peelamedu area in Coimbatore, has been transferred to the CB-CID.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


