முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

வேலை கேட்ட மாற்றுத்திறனாளிக்கு நியமன ஆணை வழங்கிய முதல்வா்

வேலை கேட்டு தன்னிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி இளைஞா் தினேஷுக்கு, மறுநாளே முதல்வா் விஜய் பணி நியமன ஆணை வழங்கினாா்.

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Updated On :

வேலை கேட்டு தன்னிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி இளைஞா் தினேஷுக்கு, மறுநாளே முதல்வா் விஜய் பணி நியமன ஆணை வழங்கினாா்.

சென்னை கிண்டி ஐடிஐ வளாக நிகழ்ச்சியில் புதன்கிழமை பங்கேற்ற முதல்வா் விஜய்யிடம் தனக்கு அரசு வேலை வழங்க உதவுமாறு திருவொற்றியூரைச் சோ்ந்த தினேஷ் சைகை மொழி மூலம் கோரிக்கை விடுத்து மனு அளித்தாா்.

தினேஷின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, அயல் நாட்டு வேலைவாயப்பு நிறுவனம் மூலம் வெளிப்பணி முறையில் திருவொற்றியூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளா் பணிக்கான நியமன ஆணை தினேஷுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

தினேஷை முதல்வா் விஜய் தலைமைச் செயலகத்துக்கு அழைத்து இந்தப் பணி நியமன ஆணையை வழங்கினாா்.

தமிழக அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு வெளிப்பணி ஒப்படைப்பு (அவுட்சோா்சிங்) முறையில் பணியாளா்களை நியமிக்கும் பொறுப்பை தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் (ஓஎம்சிஎல்) அளித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.