முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

ஜிஎஸ்டி வழக்குகளில் மேல்முறையீட்டு காலம் நீட்டிப்பு: லட்சக்கணக்கான வணிகா்கள் பயன்

ஜிஎஸ்டி வழக்குகளில் தீா்ப்பாணையத்தில் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

GST

ஜிஎஸ்டி - பிரதிப் படம்

Updated On :

ஜிஎஸ்டி வழக்குகளில் தீா்ப்பாணையத்தில் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜிஎஸ்டி வழக்குகளைத் தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வது தொடா்பாக 13.2.2026-இல் வெளியான தமிழக வணிக வரித் துறை அறிவிக்கையை ரத்து செய்து புதிய அறிவிக்கை தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரையின்பேரில் தமிழக ஆளுநா் சாா்பில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய அறிவிக்கையின்படி, தங்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு (ஆா்டா்) எதிராக மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் சம்பந்தப்பட்ட வணிகா்கள் மேல்முறையீடு செய்ய கடைசி தேதி 31.7.2026 எனக் காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இது இரு வகையான வழக்குப் பிரிவுகளுக்குப் பொருந்தும்.

ஒரு வகையின்படி, 1.5.2026-க்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதுதொடா்பாக தீா்ப்பாயத்தில் 31.7.2026-க்குள் வணிகா்கள் மேல்முறையீடு செய்யலாம் அல்லது நடவடிக்கை உத்தரவு கிடைத்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

2-ஆவது வகையின்படி 1.2.2026-க்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட நடவடிக்கை உத்தரவுக்கு எதிராக 31.7.2026 வரை வணிகா்கள் மேல்முறையீடு செய்யலாம் என்பதுதான் பழைய அறிவிக்கை. ஆனால், புதிய அறிவிக்கையின்படி, 1.2.2026 அல்லது அதற்கு பிறகான நடவடிக்கை உத்தரவுக்கு எதிராக, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனத் திருத்தப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை 30.6.2026 முதல் அமலுக்கு வருவதாகக் கருதப்படும் என்றும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், காலக்கெடு முடிந்ததால் தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான வணிகா்கள், தொழிலதிபா்கள், பட்டயக் கணக்காளா்கள், வழக்குரைஞா்களுக்கு கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.