நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

ஒகேனக்கல்லில் 19-ஆவது நாளாக பரிசல் இயக்கத் தடை!

ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்துள்ள நிலையில், 19-ஆவது நாளாக பரிசல் இயக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

coracle operations suspended for the 19th day

19-ஆவது நாளாக பரிசல் இயக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் பரிசல் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரிசல்கள். - டிஎன்எஸ்

Published On :4 செப்டம்பர் 2026, 9:27 am IST

பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை 9,000 கனஅடியாக குறைந்துள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 9,000 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.

நீா்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவாா் பாணி, பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளது.

அருவிகளில் நீா்வரத்து குறைந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடா்ந்து 19-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

Summary

Water inflow to Hogenakkal drops to 9,000 cusecs; coracle operations suspended for the 19th day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.