
தவெகவுக்கு கம்யூனிஸ்ட் ஆதரவு உண்டு; மிசா கொடுமையைச் சந்தித்தவர் மு.க. ஸ்டாலின்! திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி...
விசிக தலைவர் திருமாவளவன் - Video clip
மிசா காலத்து கொடுமைகளைச் சந்தித்த முக்கிய தலைவர் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"ஜூலை 1 ஆம் தேதி நடந்த தவெக கூட்டணி கூட்டத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை. எனினும் தங்கள் ஆதரவு உண்டு என்று கூறினார்கள். தற்போதும் அதே நிலைபாட்டில்தான் இரு கட்சிகளும் உள்ளன. 5 ஆண்டு காலம் அவர்களின் ஆதரவு தவெக அரசுக்கு உள்ளது. அவர்களது இந்த கருத்தை அவ்வப்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் கூட்டணி குறித்து அவர்கள் இன்னும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை. தொகுதி உடன்பாட்டு குறித்து எந்த நெருடலும் இல்லை. தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.
அதனால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு தவெகவுக்கு உண்டு. இரு தொகுதிகளின் வெற்றி குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக விசிக பாடுபடும்.
மிசா காலத்து கொடுமைகளை சந்தித்த முக்கிய தலைவர் முன்னாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின். வரலாறை எப்போதும் மறைக்க முடியாது. திமுக தலைவர்கள் யாரெல்லாம் கைது செய்யப்பட்டு கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்களோ அவர்களில் ஒருவர் ஸ்டாலின். முதல்வர் விஜய், தான் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறி வருத்தம் தெரிவித்திருக்கிறார். விசிகவும் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம்" என்றார்.
Summary
M.K. Stalin is someone who endured the atrocities of MISA: Thirumavalavan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



