தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

கோவையில் பெண் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி சுட்டுப் பிடிப்பு

கோவையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தப்பியோட முயன்ற இளைஞர் சுட்டுப் பிடிக்கப்பட்டது குறித்து...

Youth shot and captured while attempting to flee after a sexual assault incident in Coimbatore.

பிரதிப் படம்

Published On :

கோவையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தப்பியோட முயன்ற இளைஞரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.

கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் தெற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை இரவில் 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உரிய சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தோஷ் (24), தவசி (28) இருவரும் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்யும் வகையில் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்ந்து, விசாரணைக்காக தவசியை சம்பவ இடத்துக்கு ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுவர்ணவள்ளியை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றார். இதில் ஆய்வாளர் சுவர்ணவள்ளிக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, தவசியை காவல்துறையினர் பலமுறை எச்சரித்தபோதிலும், காவல் அதிகாரியைப் பாதுகாக்கும் பொருட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த மற்றொரு ஆய்வாளர் சிலம்பரசன், தவசியை சுட்டுப் பிடித்தார்.

Summary

Youth shot and captured while attempting to flee after a sexual assault incident in Coimbatore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.