ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!
அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி...

அன்பில் மகேஸ் பொய்யாமொழி. - கோப்புப் படம்
தமிழ்நாடு முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சங்கத்தை நடத்தி வரும் அரசகுமார் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, DTCP / CMDA அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் பெற்று ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஜூன் மாதம் பி.டி. அரசகுமாரை கைது செய்தனர். அவரிடன் விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து, குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், அரசகுமார் தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, திருச்சி தென்னூரில் உள்ள அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை, திருச்சியில் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
அன்பில் மகேஸ் வீட்டுக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் பரபரப்பு நிலவுகிறது.
தொடர்ந்து, அன்பில் மகேஸ் வீட்டுக்கு வெளியே திமுக தொண்டர்கள் வரத் தொடங்கியதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Summary
Rs. 100 crore collected! Corruption case registered against Anbil Mahesh!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





