
இடைத்தேர்தலில் தவெக மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெக பின்னடைவைச் சந்திக்கும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - X | Nainar Nagenthran
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெக பின்னடைவைச் சந்திக்கும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி வேடிக்கையாக உள்ளது. மக்களுக்கான பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் ரீல்ஸ் ஆட்சியை நடத்தி வருகின்றனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து தவெக அரசின் நிலைப்பாடு தேவையற்றது. மீனவர் நலனுக்கான படத்தை நடித்துவிட்டு மீனவ கிராமத்தையே அழிக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளார். கட்சியை முறையாக வழிநடத்த ஆள் இல்லாததால் இதுபோன்று தவறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு தலைமைச் செயலகம் பல ஆண்டுகாலம், பல தலைவர்கள் தற்போது செயின் ஜார்ஜ் கோட்டையில் இருந்து செயல்பட்டனர். ஆனால் அதை மாற்றும் விதத்தில் தற்போது நாமக்கல் கவிஞர் மாளிகையில் 5 கோடி ரூபாய்க்கு முதல்வர் அறை மாற்றம், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் உருவாக்குவது தேவையற்றது. மக்களின் வரிப்பணம் இதனால் விரயம் செய்யப்படுகிறது. இது தேவையற்றது.
தமிழகத்தில் தற்போது மின்வெட்டு அதிகரித்துள்ளது. தமிழக மின்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் முறையான செயல்பாட்டில் இல்லை. இதில், பஞ்சாப்பை ஒப்பிட்டு தமிழக மின் துறை அமைச்சர் பேசுவது வேடிக்கையான விஷயம். அவர் தமிழ்நாட்டிற்கு பதிலாக பஞ்சாபில் போய் வேலை செய்யலாம். உடனடியாக தமிழக மின்வெட்டை சீர் செய்ய புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். மின்மிகை மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் பேசுகையில், “நாள்தோறும் குழந்தைகள் முதியவர்கள் நோயாளிகள் என அதிகம் பயன்படுத்தும் ஆவின் பாலின் தரம் அளவு குறைந்துள்ளதால் பால் தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் எதிர்காலத்தில் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனை சரி செய்ய கிராம மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு உடனடியாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் கால்நடைகள் வாங்க வங்கி கடன்கள் அளிக்க வேண்டும். அதன் மூலம் புதிய பால் கொள்கையை உருவாக்கி பால் தட்டுப்பட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக பிரச்சனையை சரி செய்ய பால்வளத்துறை அமைச்சர் உடனடியான கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் தற்போது நடைபெறவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்.
தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சில முக்கிய பிரச்சினைகள் குறித்து அரசு முறையான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதித்தது கண்டிப்பாக இடைத்தேர்தலில் அவர்களின் வெற்றியைப் பாதிக்கும்.
தற்போது தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி என்பது மதிப்பில்லாத இரட்டை பூஜ்ஜிய ஆட்சி. தமிழகத்தில் ரியல் ஆட்சி நடைபெறவில்லை, ரீல்ஸ் ஆட்சி மட்டுமே நடக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
Summary
BJP State President Nainar Nagendran has stated that TVK will face a setback in the upcoming by-election in Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






