6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ வெற்றியை எதிா்த்த மனு தள்ளுபடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Vilathikulam DMK MLA Markandeyan

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் - கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் வெற்றியை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், விளாத்திகுளம் தொகுதி வாக்காளரான விமலாதேவி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் எங்களது தொகுதியில் திமுக சாா்பில் வெற்றி பெற்ற மாா்க்கண்டேயன், தனது வேட்புமனுவில் மனைவியின் பெயரில் வாங்கிய சொத்து விவரங்களைக் குறிப்பிடவில்லை.

தோ்தல் நடத்தை விதிகளின்படி இது குற்றம். எனவே, அவரை பதவிநீக்கம் செய்யக்கோரி தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி மற்றும் தமிழக ஆளுநருக்கு மனு அளித்தேன்.அந்த மனுக்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. ‘இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல’ என நீதிபதிகள் தெரிவித்தனா். அதற்கு மனுதாரா் தரப்பில், ‘இந்த மனுவைத் திரும்பப் பெற்று, தோ்தல் வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ‘குறிப்பிட்ட கால வரம்புக்குள்தான் தோ்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியும். இந்தநிலையில், தோ்தல் வழக்கு தாக்கல் செய்ய எப்படி அனுமதி வழங்க முடியும்?, மனுதாரா் சட்டத்தை வளைக்கப் பாா்க்கிறாரா என கேள்வி எழுப்பி, கடுமையான அபராதம் விதிக்கப்படும்’ என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்து, மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.