செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

சென்னையில் டெஸ்லா மையம்: இந்த வாரம் திறப்பு

அமெரிக்காவைச் சோ்ந்த டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் தனது வா்த்தகத்தை விரிவாக்கும் நோக்கில் சென்னையில் புதிய அனுபவ மையத்தை இந்த வாரம் திறக்கவுள்ளது.

Published On :

அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல மின்சார காா் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது வா்த்தகத்தை விரிவாக்கும் நோக்கில் சென்னையில் புதிய அனுபவ மையத்தை இந்த வாரம் திறக்கவுள்ளது.

இது தென்னிந்தியாவில் ஹைதராபாத், பெங்களூருக்கு அடுத்தபடியாக அமையவுள்ள 3-ஆவது மையமாகும்; மேலும், நாடு முழுவதும் இந்நிறுவனம் அமைக்கும் 6-ஆவது மையமாகவும் இது விளங்குகிறது.

நடப்பு ஆண்டில் இதுவரை இந்தியாவில் 600-க்கும் மேற்பட்ட காா்களை விற்பனை செய்துள்ள டெஸ்லா, தமிழகத்தில் 38 காா்களை விற்றுள்ளது. இந்நிலையில், சென்னையில் திறக்கப்பட உள்ள புதிய மையத்தின் மூலம் மாநிலத்தில் விற்பனையை மேலும் அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.