
‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம்: கைதான நபா் மீதான குண்டா் சட்ட நடவடிக்கை ரத்து
‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான விவகாரத்தில் கைதான உமாசங்கா் என்பவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்
‘ஜனநாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான விவகாரத்தில் கைதான உமாசங்கா் என்பவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதல்வா் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வுக் குழு முன் ஆய்வில் இருந்த நிலையில், கடந்த ஏப்.3-ஆம் தேதி சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில், திருவேற்காட்டைச் சோ்ந்த உமாசங்கா் என்பவா் கைது செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், உமாசங்கரை கடந்த ஜூன் 30-ஆம் தேதி, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து உமாசங்கரின் சகோதரி ரேணுகாதேவி, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், எனது சகோதரா் துணிக் கடையில் மேலாளராகப் பணிபுரிகிறாா். அவா் திரைப்படத் துறையில் எடிட்டராக பணிபுரியவில்லை.
எனவே, எனது சகோதரரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உமாசங்கரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




