தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவுகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்.

Published On :

தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மாநகர, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் விடியல் பயண திட்டத்தை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

இந்தத் திட்டத்தை எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ், புறநகர் சாதாரண பேருந்துகள் என விரிவுபடுத்தி ’வெற்றி பயணம்’ என முதல்வர் விஜய் அக். 2 முதல் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் பல லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி பயணத் திட்டம் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், தனியார் பேருந்துகளை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே பேருந்து கட்டணத்தை உயா்த்த வேண்டும், மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தி மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஒருநாள் (செப். 30) கவன ஈா்ப்பு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

தனியார் பேருந்து தொழிலை நம்பி 3 லட்சம் ஊழியர்கள் உள்ள நிலையில், தொழிலைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை (செப். 30) நள்ளிரவு வரை ஒருநாள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தனியார் பேருந்துகளின் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக தனியர் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக வருவாய், போக்குவரத்துத் துறைகளின் அமைச்சர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Summary

The private bus owners' association has announced that the strike has been postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.