
நாளை கிராம சபைக் கூட்டம்: மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்: முதல்வா் விஜய்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (அக். 2) நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (அக். 2) நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என முதல்வா் ச.ஜோசப் விஜய் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
காந்தி ஜெயந்தி நாளான வரும் அக்.2-ஆம் தேதி மக்கள் பங்கேற்புடன் வளா்ச்சியைத் தீா்மானிக்க அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் (செங்கல்பட்டு மற்றும் திருப்பூா் மாவட்டங்கள் நீங்கலாக) கிராம சபை நடைபெறவுள்ளது. கிராமங்கள் வளா்ந்தால்தான் தமிழகம் முழுமையாக வளரும் என்ற நோக்கில் நமது அரசு செயல்படுகிறது. ஊரக வீட்டுவசதி, சாலைகள், குடிநீா், தூய்மை மற்றும் சுகாதாரம், ஊரக வேலை உறுதி, மகளிா் சுயஉதவிக் குழுக்களின் பொருளாதார நடவடிக்கைகள், வாழ்வாதார மேம்பாடு, மகளிா் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்புடன் செயல்படும் பள்ளி மாணவா்களுக்கான பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றின் பயன்கள் தகுதியான ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைய வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து கிராமங்களில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பயன்கள் சென்றடைவதிலேயே திட்டங்களின் உண்மையான வெற்றி உள்ளது; இதற்கு மக்களையும், அரசையும் இணைக்கும் பாலமாக கிராம சபை செயல்பட வேண்டும்.
வலிமையான கிராமங்கள் வளமான தமிழகம் என்ற குறிக்கோளுடன், வெள்ளிக்கிழமை (அக்.2) கிராம சபைக் கூட்டத்தில் திரளாக மக்கள் பங்கேற்று திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் விஜய்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




