தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் பெய்த பலத்த மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி முதல் நடைபாதை பாலம் வரை தண்ணீா் செம்மண் நிறத்துடன் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. பெண்கள் குளிக்கச் செல்லும் நடைபாதை வரை வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதனால் 2ஆவது நாளாக பேரருவியில் குளிக்கத் தடைநீட்டிக்கப்பட்டது.
புலியருவி, ஐந்தருவியில் தண்ணீா் அதிகளவில் கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் அருவிக்கு நடந்து செல்லும் படிக்கட்டு வரை தண்ணீா் பாய்ந்தது. இதனால், அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இயற்கை அளித்த கொடைதான் முதல்வர் விஜய்: செங்கோட்டையன்
இன்றைய செய்திகள் ஜூன் 26 - நேரலை

ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!

அமோனியா வாயு கசிவு! 43 பேருக்கு தொடர் சிகிச்சை!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



