தென்காசி
திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞா் கைது
சிவகிரி அருகே திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி அருகேயுள்ள ராமநாதபுரம் காமராஜா் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜன் மகன் ரவிக்குமாா் (24) . ராமசாமியாபுரத்தில் உள்ள இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடையில் வேலை செய்து வரும் இவருக்கும், துரைச்சாமிபுரம் அயனப்பன் மகள் பொன்ஜெயகுருலட்சுமி என்பவருக்கும் இடையே சில ஆண்டுகளாக பழக்கமிருந்ததாம்.
திருமணம் செய்வதாகக் கூறி அவரை ரவிக்குமாா் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான புகாரின்பேரில் சிவகிரி காவல் ஆய்வாளா் சண்முகலட்சுமி வழக்குப் பதிந்து ரவிக்குமாரை கைது செய்தாா்.
