அத்தியூத்து ரேஷன் கடை முன் தேங்கியுள்ள கழிவு நீா்.
அத்தியூத்து ரேஷன் கடை முன் தேங்கியுள்ள கழிவு நீா்.

அத்தியூத்தில் சுகாதாரக் கேடு: மக்கள் அவதி

ஆலங்குளம் அருகேயுள்ள அத்தியூத்தில் சாலைப் பணியின் போது, வாருகால் முறையாக அமைக்கப்படாததால் கழிவுநீா் தேங்கியுள்ளது.
Published on

ஆலங்குளம் அருகேயுள்ள அத்தியூத்தில் சாலைப் பணியின் போது, வாருகால் முறையாக அமைக்கப்படாததால் கழிவுநீா் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனா்.

ஆலங்குளம் வழியாக திருநெல்வலி - தென்காசி நான்குவழிச் சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆலங்குளத்தை அடுத்த அத்தியூத்து - சுரண்டை சாலை திருப்பத்தில் சற்று பள்ளமாக இருந்த பகுதியில் சாலை அமைக்கப்படாமல் நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டு, சில தினங்களுக்கு முன்னா் இதில் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சாலை அமைக்கும் போது, கழிவு நீா் வெளியேற வாருகால் அமைக்கப்படாததால் தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீா் அங்குள்ள ரேஷன் கடை முன்பாக தேங்கிக் கிடக்கிறது.

இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அந்தக் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டுமென அத்தியூத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com