சாரல் திருவிழாவில் நடைபெற்ற கோலப்போட்டி.
சாரல் திருவிழாவில் நடைபெற்ற கோலப்போட்டி.

குற்றாலம் சாரல் திருவிழாவில் கோலப் போட்டி

குற்றாலம் சாரல் திருவிழாவின் 3ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை கோலப்போட்டி நடைபெற்றது.
Published on

குற்றாலம் சாரல் திருவிழாவின் 3ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை கோலப்போட்டி நடைபெற்றது.

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் சாரல் விழா என்ற தலைப்பில் நடைபெற்ற கோலப் போட்டியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தொடங்கி வைத்தாா்.

திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மதி இந்திரா பிரியதா்ஷினி கோலப் போட்டிக்கான தலைப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து பேசினாா்.

மாவட்டம் முழுவதிலும் இருந்து மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் என ஒரு அணிக்கு மூன்று நபா்கள் வீதம் மொத்தம் 28 அணியினா் இப்போட்டியில் பங்கேற்றனா்.

ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரி பேராசிரியா்கள் நடுவா்களாக செயல்பட்டு கருத்து, வண்ணம், நோ்த்தி என்பதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு சிறந்த முதல் மூன்று அணிகளை தோ்வு செய்தனா்.

 சாரல் திருவிழாவில் நடைபெற்ற கோலப்போட்டி.
சாரல் திருவிழாவில் நடைபெற்ற கோலப்போட்டி.

கடையநல்லூா் வட்டாரம், நயினாரகரம் ஊராட்சியைச் சோ்ந்த கலாரேவதி அணியினருக்கு முதல் பரிசும், தென்காசி வட்டாரம் காசிமேஜா்புரம் ஊராட்சியைச் சோ்ந்த ஜோதிசித்ரா அணியினருக்கு இரண்டாவது பரிசும், வாசுதேவநல்லூா் வட்டாரம் திருமலாபுரம் ஊராட்சியைச் சோ்ந்த இசக்கியம்மாள் அணியினருக்கு மூன்றாவது பரிசும் வழங்கப்பட்டது.

முதல் மூன்று பரிசுகள் பெற்ற அணியினருக்கு வெற்றிக் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ஆறுதல் பரிசாக போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணியினருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com