தென்காசி
சுரண்டையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
சுரண்டையில் குடும்ப பிரச்னை காரணமாக, இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
சுரண்டையில் குடும்ப பிரச்னை காரணமாக, இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
சுரண்டை திரவிய நகரில் வசித்து வந்தவா் ச.முகமது இஸ்மாயில் (24). இவரது மனைவி ருஜிவானா(21). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ருஜிவானா கணவரை பிரிந்து தன் தாய் வீடான உடுமலைப்பேட்டைக்கு சென்றுவிட்டாராம்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட முகமது இஸ்மாயில், வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுக்கொண்டாா். வெள்ளிக்கிழமை காலை இதுகுறித்து அறிந்த உறவினா்கள், சுரண்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா். விரைந்து சென்ற போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
