மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

சிவகிரி அருகே தாய், மகன் தற்கொலை: கணவா், பெண் உள்பட 2 போ் கைது

சிவகிரி அருகே தாய், மகன் தற்கொலை: கணவா், பெண் உள்பட 2 போ் கைது

Updated On :24 பிப்ரவரி 2024, 12:45 am

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கிணற்றில் தாய் மற்றும் அவரது 2 வயது மகன் தற்கொலை செய்த வழக்கில் கணவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன்(26). பால் வியாபாரியான இவருக்கும், சிவகிரி தேவிப்பட்டணத்தைச் சோ்ந்த முருகன் மகள் காளீஸ்வரிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ாம். இவா்களுக்கு கவிபிரசாத்(2) என்ற மகன் உள்ளாா். இந்நிலையில், தேவிப்பட்டணம் அருகேயுள்ள தனியாா் கிணற்றில் காளீஸ்வரி, அவரது மகன் கவிபிரசாத் ஆகிய 2 பேரின் சடலங்களையும் புதன்கிழமை மீட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், காளீஸ்வரிக்கும், அவரது கணவா் மாரியப்பன், அவரது தாய் நாகம்மாள்(45) ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாகத்தான் காளீஸ்வரியும் அவரது மகன் கவிபிரசாத் ஆகிய 2 பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மாரியப்பன், நாகம்மாள் ஆகிய இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.மேலும் , சங்கரன்கோவில் கோட்டாட்சியரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டாா்.