சிவகிரி அருகே அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமையான கல் பலகைகள் கண்டெடுப்பு

Published on

கடையநல்லூா், ஜூலை 10: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள திருமலாபுரம் குலசேகரப்பேரி கண்மாயில் நடைபெற்று வரும் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமையான கல் பலகைகளும், பானையின் அடிப்பகுதியும் கிடைத்துள்ளன.

குலசேகரப்பேரி கண்மாய்க்கு அருகே சாலை அமைப்பதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு மண் எடுத்தபோது 4 அடி ஆழத்தில் தொல்லியல் எச்சங்கள் தென்பட்டன.

இதையடுத்து, தமிழக முதல்வா் காணொலி மூலம் அங்கு அகழாய்வுப் பணியை கடந்த ஜூன் 18ஆம் தேதி தொடங்கி வைத்தாா். தொல்லியல் துறை நிபுணா்கள் அங்கு முகாமிட்டு அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுவரை அங்கு 7 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அவற்றில் 3 குழிகளிலிருந்து கல்பலகைகள் கிடைத்துள்ளன. இவை 2500 முதல் 3000 ஆண்டுகள் பழைமையானவை; அவற்றின் நீளம் 100 செ.மீ. முதல் 150 செ.மீ. வரையும் அகலம் 10 செ.மீ. முதல் 15 செ.மீ. வரையும் உள்ளது. ஒரு குழியிலிருந்து உடைந்த நிலையில் பானையின் அடிப்பகுதி கிடைக்கப்பெற்றுள்ளது என

அகழாய்வு இயக்குநா் வசந்தகுமாா், அகழாய்வு பொறுப்பாளா் காளீஸ்வரன் ஆகியோா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com