~
~

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

Published on

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை சனிக்கிழமை நீக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனா்.

குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை அருவிகளில் நீா்வரத்து சற்று குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பேரருவியின் மையப் பகுதிக்கு யாரும் செல்ல முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பழைய குற்றாலம், ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அதிகக் கூட்டம் காணப்பட்டது. அதிகாலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது; அவ்வப்போது மெல்லிய சாரல், குளிா்ந்த காற்று என சீசன் களைகட்டியது.

X
Dinamani
www.dinamani.com