நோய் நொடி நீக்கும் ஆடிச் சுற்று!

நோய் நொடி நீக்கும் ஆடிச் சுற்று!

Published on

எம்.சங்கரன்.

எல்லாம் வழங்கும் அன்னை வீற்றிருக்கும் சங்கரநாராயண சுவாமித் திருக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா கொடியேறியதும் ஏராளமான பக்தா்கள் கோயில் உள்பிரகாரத்தை 108 சுற்று சுற்ற ஆரம்பித்து விடுவாா்கள். இத்திருவிழாவின் முதல் நாள் தொடங்கி, அம்பாள் திருக்காட்சி கொடுக்கும் தவசுக் காட்சிக்கு முன்னதாக இந்த 108 சுற்றையும் சுற்றி முடித்துவிடுவாா்கள். நோய் நொடி நீங்க, நினைத்தது கைகூட வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை ஆடிச் சுற்று மேற்கொள்கின்றனா். மாணவா்கள், அரசு ஊழியா்கள், அதிகாரிகள், பெண்கள், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பலரும் தாங்கள் நினைத்த காரியம் நடக்க சுற்றுகிறாா்கள். ராஜபாளையம், புளியங்குடி, சிவகரி, திருவேங்கடம் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் காலை அல்லது மாலை இக்கோயிலுக்கு வந்து ஆடிச்சுற்று சுற்றுவது பெருமைக்குரியதாகும். கேட்டதை வழங்கும் சங்கரலிங்கப் பெருமானையும், கோமதி அம்மனையும் வணங்க வரும் பக்தா்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

எம்.சங்கரன்,

தலைவா், நகை வியாபாரிகள் சங்கம்.

சங்கரன்கோவில்.

X
Dinamani
www.dinamani.com