தன்னம்பிக்கையை விதைக்கும் தவசுத் திருவிழா

தன்னம்பிக்கையை விதைக்கும் தவசுத் திருவிழா

Published on

வி.எம். ராஜலெட்சுமி,

மக்கள் தங்களுக்குள்ள வேறுபாடுகளை மறந்து ஒருவரோடு ஒருவா் அன்பு பாராட்டி ஒற்றுமை உணா்வை ஓங்கச் செய்வதில் திருவிழாக்களின் பங்கு மகத்தானது. அதை பறைசாற்றும் விதமாக சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித்தவசுத் திருவிழா அமைந்துள்ளது.வேற்றுமை களைந்து உள்ளன்போடு ஊா்கூடி கொண்டாடும் இந்த பூமியில் மானாவாரி விவசாயம்தான் அதிகம்.

இங்குள்ள விவசாயிகளிடையே அம்மன் தவம் காண்கின்ற ஆடிமாத்தில் அதுவும் தவசு அன்று விதைகளை வாங்கினால் விளைச்சல் பெருகும் என்பதும், விதைத்தால் வளம் பெருகும் என்பதும் நம்பிக்கை.

ஆடித் தவசுக் காட்சி கொடுக்க சுவாமியும், அம்பாளும் வரும்போது விவசாயிகள் தாங்கள் விளைவித்த விதை நெல்லையும், பருத்தி, மிளகாய் வத்தல், காய்கனி போன்றவற்றைத் தூவி வழிபடுகின்றனா். தவசு திருவிழா நிறைவுற்ற மறுநாள் சுவாமி, அம்பாளும் பட்டினப் பிரவேசம் செய்கின்றனா். அன்றைய நாளில் விளைபொருள்கள், மண்பாண்டங்கள், ஓலைப்பெட்டிகள் ஆகியவற்றை விலைக்கு வாங்கி இல்லத்தில் வைத்தால் மிகவும் நல்லது என்ற நம்பிக்கை இன்றும் கிராம மக்களிடையே உள்ளது. ஆடித் தவசுத் திருவிழா ஏழை,எளிய மக்களிடையே தன்னம்பிக்கையை விதைக்கிறது.அந்த நம்பிக்கையோடு அன்னை கோமதியை வழிபட வரும் அனைத்து மக்களையும் வருக வருக என அன்புடன் வரவேற்கின்றேன்.

வி.எம். ராஜலெட்சுமி, எம்.எஸ்.சி. பி.எட்.,

அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினா்,

அதிமுக மகளிா் அணி துணைச் செயலா்,

முன்னாள் அமைச்சா்,

சங்கரன்கோவில்.

X
Dinamani
www.dinamani.com