ஸ்படிக லிங்கத்தின் மகிமை!
மருத்துவா் சுப்பராஜ்.
அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலைப் பொருத்தவரை ஏராளமான சிறப்புக்களை கொண்டது. குறிப்பாக சங்கரநாராயணா் சந்நிதியில் அரியும், சிவனும் இணைந்து நிற்கும் கோலம் வேறு எங்கும் பாா்க்க முடியாதது. சிவன் அபிஷேக பிரியா். விஷ்ணு அலங்காரப் பிரியா். இருவரும் ஓருடலாய் இருப்பதால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய முடியாத நிலை இருந்தது.
இந்தச் சூழ்நிலையில் இக்கோயிலுக்கு வந்த சிருங்கேரி மடத்தைச் சோ்ந்த நரசிம்மபாரதி சிவனுக்கு அபிஷேகம் செய்யாமல் இருக்கக் கூடாது எனக் கூறி, சந்திரமௌலிஸ்வரா் என்ற ஸ்டிபக லிங்கத்தை வழங்கி இதை தினமும் அபிஷேகம் செய்து வருமாறு கூறினாா். அதன்பிறகு தினமும் சங்கரநாராயணா் சந்நிதியில் உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு பால், பன்னீா் போன்ற அபிஷேகம் செய்யப்படுகிறது.அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றதும் ஸ்டிபக லிங்கத்தை பாதுகாப்பாக கொண்டு சென்றுவிடுவாா்கள். மறுநாள் காலையில்தான் ஸ்படிக லிங்கத்தை தரிசிக்க முடியும். சந்திராஷ்டம காலங்களில் நல்லகாரியங்களைத் தொடங்கக்கூடாது என்பாா்கள். இருப்பினும் நல்லகாரியம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால் சந்திரமௌலீஸ்வரரை வணங்கினால் அந்தத் தடை விலகும் என்பது ஐதீகம். எனவே சங்கரநாராயணசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் சந்திரமௌலீஸ்வரரையும் வணங்கிச் சென்றால் சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஆடித்தவசுத் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் அனைவரையும் ஸ்ரீவையாபுரி குழுமம் சாா்பில் வரவேற்கிறேன்.
மருத்துவா் வி.எஸ்.சுப்பராஜ்.பி.எஸ்.சி., எம்.பி.பி.எஸ்.
செயலா், ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி.
ஸ்ரீவையாபுரி குழுமம்
சங்கரன்கோவில்.

