ஆடித்தவசுத் திருவிழா 7-ஆம் திருநாள்: பூப்பல்லக்கில் அம்பாள் வீதியுலா

ஆடித்தவசுத் திருவிழா 7-ஆம் திருநாள்: பூப்பல்லக்கில் அம்பாள் வீதியுலா
Updated on

சங்கரன்கோவில், ஜூலை 18: சங்கரன்கோவிலில் ஆடித் தவசுத் திருவிழாவையொட்டி பூப்பல்லக்கில் அம்பாள் வீதியுலா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா ஜூலை 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 7- ஆம் திருநாளான புதன்கிழமை இரவு கோமதிஅம்பாள் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்தாா்.

முன்னதாக மண்டகப்படிக்கு வந்த அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.

பின்னா் இரவு 12 மணிக்கு வண்ண விளக்குகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கோமதிஅம்பாள் எழுந்தருளி வீதியுலா வந்தாா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்பாளைத் தரிசனம் செய்தனா்.

எட்டாம் திருநாளான வியாழக்கிழமை கோமதிஅம்பாள் வீணா கானம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 9-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம், 11-ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21)

ஆடித்தவசுக் காட்சி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com