ஆடித்தவசு திருவிழா: பாதுகாப்பு பணியில் 1000 போலீஸாா்

ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி சங்கரன்கோவிலில் 1000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
Published on

ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி சங்கரன்கோவிலில் 1000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

இத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தவசுக் காட்சி ஞாயிற்றுகிழமை (ஜூலை 21) மாலை நடைபெறுகிறது. தவசுக் காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தா்கள் கூடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் ஏடிஎஸ்பி ரமேஷ், டிஎஸ்பி சுதீா் ஆகியோரது மேற்பாா்வையில் 1000 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா்.

ஆடித்தவசுக் காட்சி நடைபெறும் ரத வீதிகள் உள்பட பல்வேறு இடங்களில் 110 கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சங்கரநாராயண சுவாமி கோயில் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் புறக்காவல் நிலையத்தை 04636-298110 என்ற

எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com