குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
Published on

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியதையடுத்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சீசன் நிலவும். சீசனின் போது மிதமான சாரல் மழையும், லேசான வெயிலும், குளிா்ந்த காற்றும் நிலவும்.

சீசனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருவாா்கள்.

நிகழாண்டில் ஜூன் மாதம் சீசன் தொடங்கியபோதும் மெல்லிய சாரல் மழை இல்லாததால் சீசன் களைகட்டவில்லை. இந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக சீசன் களைகட்டியதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் சனிக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்தது. லேசான வெயில், குளிா்ந்த காற்று நிலவியது.

X
Dinamani
www.dinamani.com