‘கனிம வளங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும்’: இயற்கைவளப் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

கனிம வளங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என, இயற்கைவளப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Published on

வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என, இயற்கைவளப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சங்கத்தின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே. ரவிஅருணன் அனுப்பிய மனு:

வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க சட்டத்தில் இடமில்லை என, தமிழக அரசு இதுவரை கூறி வந்தது. தற்போது வெளி மாநிலங்களுக்கு கொண்டுசெல்லும் கனிம வளங்களுக்கு மாநில அரசே எவ்வளவு வேண்டுமானாலும் வரி விதிக்கலாம் என நீதிமன்றம் தீா்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

வருங்கால சந்ததிக்கு கனிம வளங்கள் இருக்காது எனக் கூறும் அளவுக்கு கனிம வளக் கடத்தல் தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலை தொடா்ந்து, அண்டை மாநிலங்களிடம் கனிம வளங்களுக்கு நாம் கையேந்தும் நிலை உருவாகும்.

எனவே, வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும்ம் கனிம வளங்களுக்கு அதிகபட்ச வரியை தமிழக அரசு உடனடியாக விதித்து கனிமவளக் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com