ஆட்சியரிடம் மனு அளித்த அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் துரைசிங் உள்ளிட்டோா்.
ஆட்சியரிடம் மனு அளித்த அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் துரைசிங் உள்ளிட்டோா்.

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகத்தை திறக்க வலியுறுத்தல்

தென்காசியில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியா் அலுவலகத்தை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
Published on

தென்காசியில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியா் அலுவலகத்தை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. துரைசிங், மாவட்டத் தலைவா் பெ.க. மாடசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் வே. வெங்கடேஷ், மாவட்ட துணைத் தலைவா் க. மாா்த்தாண்டபூபதி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் வை. சீனிப்பாண்டி உள்ளிட்டோா் அளித்த மனு:

தென்காசி மாவட்டத்தில் தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பேருந்துகள் சுற்றி செல்லாமல் ரயில்வே கேட் அணுகு சாலை வழியாக மேம்பாலத் தூண் வேலை முடியும் வரை இரு மாா்க்கத்திலும் இயக்க வேண்டும்.

பெரும்பாலான அரசு ஊழியா்கள் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் மனு பெறும் கூட்டம் உள்ளிட்ட ஆய்வுக் கூட்டங்களை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவும், விடுமுறை நாள்கள், அலுவலக நேரத்துக்குப் பின் (தவிா்க்க முடியாத இனங்களை தவிர) ஆய்வுக் கூட்டம் நடத்துவதைத் தவிா்க்கவும் வேண்டும்.

தென்காசியில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியா் அலுவலகத்தை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியா்கள், அலுவலா்களின் மனம் புண்படும்படி உயா்அதிகாரிகள் பேசுவதைத் தடுக்க வேண்டும்.

கடையநல்லூா் அரசு ஐடிஐ முன் மாணவா்கள், ஊழியா்கள் நலன் கருதி பேருந்துகள் நின்று செல்லவும் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், ஐடிஐ வரை அரை கி.மீ. தொலைவு சாலை வசதி ஏற்படுத்தவும் வேண்டும். பணியிட மாறுதல்கள் கலந்தாய்வு முறையில் நடைபெற வேண்டும் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com