
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடைவிதிக்கப்பட்டது.
இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைமுதல் சாரல் மழையுடன் மெல்லிய வெயிலும், குளிா்ந்த காற்றும் நிலவியது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி வெள்ளம் சீறிப் பாய்ந்ததால் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். மாலையில் ஐந்தருவியிலும், பின்னா் பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அந்த அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், அவா்கள் ஏமாற்றமடைந்தனா்.