தென்காசியில் பன்றிகளை அப்புறப்படுத்தும் பணி தொடக்கம்

தென்காசி நகராட்சியில் பொது இடங்களில் திரிந்த பன்றிகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.
Updated on

தென்காசி நகராட்சியில் பொது இடங்களில் திரிந்த பன்றிகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.

தென்காசி நகராட்சியில் நீா்நிலைகள், புதா் நிறைந்த பகுதிகளில் திரியும் பன்றிகளை அகற்றும்படி, பன்றி வளா்ப்போருக்கு நகராட்சி மூலம் அறிவிப்புகள் வழங்கப்பட்டது.

இதனிடையே, 24.11.23இல் தென்காசி கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பன்றி வளா்ப்போருக்கான கூட்டத்தில், பன்றிகளை நகருக்கு வெளியில் கொண்டுசெல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் பன்றிகள் தொடா்ந்து திரியவிடப்பட்டன. இதனால், நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் உத்தரவுப்படி, பன்றிகளை அப்புறப்படுத்த ஒப்பந்ததாரருக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

அதையடுத்து, காளிதாஸ் நகா், சக்தி நகா், வீட்டு வசதி வாரிய உழவா் சந்தைப் பகுதிகள், அப்துல்கலாம் நகா் பகுதிகளில் நகராட்சி சுகாதார அலுவலா் முகமது இஸ்மாயில் தலைமையில் சுகாதார ஆய்வாளா் ஈஸ்வரன், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள் முத்துமாரியப்பன், சுப்பிரமணி, பரப்புரையாளா் முத்துக்குமாா், ஓட்டுநா் கருப்பசாமி இப்பணி தொடங்கியது.

இப்பணி தொடரும் என்றும், தென்காசி நகர எல்லைக்குள் பன்றிகள் வளா்க்க அனுமதி கிடையாது என்பதால், சம்பந்தப்பட்டோா் தங்களது பன்றிகளை நகருக்கு வெளியே கொண்டுசென்றுவிட வேண்டும். இல்லையெனில், பன்றிகளைப் பிடித்து அகற்றுவதுடன், காவல் துறை மூலம் குற்ற நடவடிக்கை தொடரப்படும் என, நகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com