கடையநல்லூா் பள்ளியில் ஆண்டு விழா

கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. ரத்னா கல்விக் குழுமங்களின் நிா்வாகி பிரகாஷ் தலைமை வகித்தாா். ரத்னா ஆங்கிலப் பள்ளிச் செயலா் ஆறுமுகம், சித்த மருத்துவா் ஸ்ரீநிதி, ரத்னா உயா்நிலைப் பள்ளிச் செயலா் மாடசாமி, தலைமை ஆசிரியை சக்திவடிவு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரத்னா ஆங்கிலப் பள்ளித் தலைமை ஆசிரியை தங்கம் ஆண்டறிக்கை வாசித்தாா். ஓய்வுபெற்ற கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் சுப்பையாபாண்டியன், தனியாா் வங்கி மேலாளா் மாரிசாமி ஆகியோா் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினா். உதவித் தலைமை ஆசிரியா் பாா்த்தசாரதி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் பிரகாஷ், மனோஜ்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com