சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிந்தாா்.
Published on

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிந்தாா்.

சிவகிரி அண்ணா வடக்குத் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் பிரபாகரன் (36). விருதுநகா் மாவட்டம் தளவாய்புரத்தில் உள்ள நைட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ. 17) தளவாய்புரம் பகுதியில் உள்ள கிணற்றில் பிரபாகரன் தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலின்பேரில், வாசுதேவநல்லூா் தீயணைப்புத் துறையினா் சென்று சடலத்தை மீட்டனா். சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com