குற்றாலம் பேரருவியில் கொட்டும் தண்ணீா்.
குற்றாலம் பேரருவியில் கொட்டும் தண்ணீா்.

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.
Published on

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் பெய்த தொடா்மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.

இதைத் தொடா்ந்து சனிக்கிழமையும் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகமாக இருந்தது. இதனால், 2-ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com