விபத்தில் இறந்த சுப்பிரமணியன்.
விபத்தில் இறந்த சுப்பிரமணியன்.

சங்கரன்கோவில் அருகே பைக் மீது காா் மோதல்: வியாபாரி பலி

சங்கரன்கோவில் அருகே பைக் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இளநீா் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Published on

சங்கரன்கோவில் அருகே பைக் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இளநீா் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சுப்பிரமணியன்(46). இளநீா் வியாபாரியான இவா், சங்கரன்கோவிலில் வியாபாரத்தை முடித்துவிட்டு திருமலாபுரத்துக்கு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

சங்கரன்கோவில்- திருநெல்வேலி பிராதன சாலையில் குதிரைக் கோயிலை கடந்து சென்றபோது, எதிரே வந்த காா் அவா் மீது மோதியதில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சங்கரன்கோவில் காயிதேமில்லத் தெருவைச் சோ்ந்த காா் ஓட்டுநா் முகம்மதுரபீக் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com