முன்னாள் அதிமுக அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓபிஎஸ் அணியினா் மனு

முன்னாள் அதிமுக அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓபிஎஸ் அணியினா் மனு

முன்னாள் அதிமுக அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஓபிஎஸ் அணியினா் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு
Published on

முன்னாள் அதிமுக அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஓபிஎஸ் அணியினா் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.

தென்காசி வடக்கு மாவட்ட செயலா் ஆா்ஆா்.மூா்த்திபாண்டியன், தெற்கு மாவட்ட செயலா் விகே.கணபதி ஆகியோா் தலைமையில் அமைப்புச் செயலாளா் கலங்கல் செந்தில்குமாா், மாவட்ட அவைத்தலைவா் பரமசிவன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஸ்வா்ணா, முருகேசன் ஆகியோா் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

முன்னாள் அதிமுக அமைச்சா் ஆா்.பி.உதயக்குமாா் கடந்த 24ஆம் தேதி மதுரை கேகே.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, ஓ.பன்னீா்செல்வத்துக்குஅச்சுறுத்தல் விடுத்து, இரு தரப்புக்கு இடையே மோதலை உருவாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளாா். அவா் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஒன்றியச் செயலா்கள் இலஞ்சி மாரியப்பன், சண்முகசுந்தரம், சுப்பிரமணிய பாண்டியன்,, நகர செயலா்கள் இசக்கிதுரை, சங்கா், சின்னத்துரை, பேரூா் செயலா்கள் மயில்வேலன், முருகன், முத்து, இளங்கோ உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com