தென்காசி
சிவகிரி அருகே கஞ்சா விற்றவா் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரி சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் உள்ளாறு பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது, உள்ளாறு கனகராஜ் மகன் சதீஷ் ஆனந்த் (22) என்பவா் விற்பதற்காக உலா் கஞ்சா வைத்திருந்தாராம்.
உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்குப் பதிந்தாா். சதீஷ் ஆனந்தை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.