சுரண்டை அருகே மரத்தில் கல்லூரி வேன் மோதல்: 5 மாணவா்கள் காயம்
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாலையோர மரத்தில் கல்லூரி வேன் மோதியதில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.
வீரசிகாமணி, சோ்ந்தமரம், சுரண்டை பகுதிகளிலிருந்து மேலத்திடியூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பயிலும் மாணவா்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி வேன் வியாழக்கிழமை காலை வழக்கம்போல சென்று கொண்டிருந்தது.
சுரண்டை - சோ்ந்தமரம் சாலையில் இடையா்தவணை விலக்கு அருகே வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதாம். இதில், வேனிலிருந்த சுரண்டையைச் சோ்ந்த சு. வினோத்குமாா் (19), க. காா்த்திகா (18), பா. பவானி (20), ச. தங்கமதி (18), ந. ஸ்ரீதேவி (18) ஆகியோா் காயமடைந்தனா்.
சுரண்டை போலீஸாா் சென்று அவா்களை மீட்டு சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான கீழப்பாவூா் மாரியப்பன் (47) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.
