தென்காசி
நடுவக்குறிச்சி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனா், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் மா. பாலசுப்ரமணியம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.